யுக்ரேன் போருக்காக ரஷ்யாவை விமர்சித்தாலும், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுடனும் வணிகம் செய்துள்ளன என்று பின்லாந்தை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான ”Center for Research on Energy and Clean Air’ (CREA) கூறுகிறது.

ரஷ்யாவிடம் இருந்து எரிசக்திக்காக எண்ணெய் வாங்கும் இந்தியாவை டிரம்ப் குறிவைக்கும் நிலையில், CREAஇன் அறிக்கை ஐரோப்பிய நாடுகளே ரஷ்யாவிடம் இருந்து அதிக எரிசக்தியை இறக்குமதி செய்வதாகக் காட்டுகிறது.

CREAவின் அறிக்கையின் படி, 2025 ஏப்ரல் மாதத்தில் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு 3.32 பில்லியன் கன மீட்டர் எரிவாயு ஏற்றுமதி செய்யப்பட்டது, அதே நேரத்தில் 2025 ஜூன் மாதத்தில் 3.01 பில்லியன் கன மீட்டர் எரிவாயு ஏற்றுமதி செய்யப்பட்டது.

CREAவின் கூற்றுப்படி, இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் பிரதான நாடுகள் என்றால், எரிவாயுவை அதிகம் வாங்குவது ஐரோப்பிய ஒன்றியம் தான்.

நிலக்கரி: 2022 டிசம்பர் 5 மற்றும் 2025 ஜூன் மாதத்துக்கு இடையில், ரஷ்யாவின் மொத்த நிலக்கரி ஏற்றுமதியில் சீனா 44 சதவிகிதத்தை வாங்கியது. அதே காலக்கட்டத்தில் இந்தியா 19 சதவிகிதத்தையும், துருக்கி 11 சதவிகிதத்தையும், தென் கொரியா ஒன்பது சதவிகிதத்தையும், தைவான் நான்கு சதவிகிதத்தையும் வாங்கியது.

கச்சா எண்ணெய்: ரஷ்யாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சீனா 47 சதவிகிதத்தை வாங்கியது. எண்ணெய் கொள்முதலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மொத்த எண்ணெயில் இந்தியா 38 சதவிகிதத்தை வாங்கியது, ஐரோப்பிய ஒன்றியமும், துருக்கியும் 6-6 சதவீத எண்ணெயை வாங்கியுள்ளன.

திரவநிலை இயற்கை எரிவாயு (LNG): ரஷ்யா உற்பத்தி செய்யும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை அதிகம் வாங்குவது ஐரோப்பிய ஒன்றியம் தான். ரஷ்யாவின் LNG ஏற்றுமதியில் 51 சதவிகிதத்தை ஐரோப்பிய ஒன்றியம் வாங்கினால், அதற்கு அடுத்த இடத்தில் சீனா 13% மற்றும் பிரேசில் 12% பங்கு எல்.என்.ஜியை வாங்குகின்றன.

குழாய் எரிவாயு: ரஷ்யாவிடமிருந்து குழாய்கள் மூலம் அதிக எரிவாயுவை வாங்கியதும் ஐரோப்பிய ஒன்றியம் தான். ரஷ்யாவின் மொத்த குழாய் எரிவாயு ஏற்றுமதியில் 37 சதவிகிதத்தை ஐரோப்பிய ஒன்றியம் வாங்கியது என்றால், சீனா 30 சதவிகிதத்தையும் துருக்கி 27 சதவிகிதத்தையும் வாங்கியுள்ளன.

டிரம்பின் கோபத்துக்கு காரணம் வர்த்தக ஒப்பந்தமா?

ஒரு காலத்தில் மோதியுடன் அன்பாக கைகுலுக்கிய டிரம்ப், இப்போது அவருக்கு எதிராகத் திரும்பியது ஏன்?

கடந்த காலத்தைப் பார்த்தால், அதன் அறிகுறிகள் ஏற்கெனவே தோன்றத் தொடங்கிவிட்டன. பரஸ்பர உறவுகளை விட தனிப்பட்ட ‘கெமிஸ்ட்ரி’க்கு முன்னுரிமை கொடுக்கப்படக்கூடாது என்று இராஜதந்திர நிபுணர்கள் முன்னரே எச்சரித்திருந்தனர்.

மோதிக்கும் டிரம்புக்கும் இடையிலான நட்பைப் பற்றிய ஊடகச் செய்திகள் நன்றாகத் தோன்றலாம், ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் சிக்கல்களை அது வெளிக்காட்டவில்லை. அதுமட்டுமல்ல, அரசியலில் தனிப்பட்ட உறவுகள் வேலை செய்யாது.
இந்தியா, அமெரிக்கா, வர்த்தக ஒப்பந்தம்

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படவில்லை (கோப்பு படம்)

டிரம்பின் அரசியலில் உணர்ச்சிகள் ஒரு பொருட்டல்ல. எண்ணெய் அல்லது வர்த்தகப் பிரச்னையில் டிரம்புடன் இந்தியா உடன்படவில்லை என்றும், அதனால்தான் இதெல்லாம் நடக்கிறது என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், இதுவரை ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டப்படவில்லை. விவசாயம் மற்றும் பால் துறையில் அமெரிக்காவுக்கு இந்தியா சலுகைகளை வழங்காததே இதற்குக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிபிசியின் ‘தி லென்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் ஷான் ரே, “விவசாயம் மற்றும் பால்வளத் துறையை இந்தியா திறக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. நாம் இங்கிலாந்துடன் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளோம், ஆனால் இந்தத் துறைகளைத் திறக்கவில்லை” என்று கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version