மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக உள்ள வைத்தியர் வினோதன், அண்மையில் மாவட்டத்திலுள்ள சுகாதார உத்தியோகத்தர் ஒருவருக்கு எழுதிய கடிதம் பரவலான எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

குடும்பநல உத்தியோகத்தரான பெண் ஒருவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கையெடுப்பது தொடர்பில் அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில், பெண்ணின் கணவரான முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரை- எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

உரிமைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளை பயங்கரவாதிக்ள் என்று எழுதி தமிழ் மக்களது மனங்களைப் புண்படுத்தியமைக்காக வைத்தியர் விநோதன் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version