iமாஸ்கோ: அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்யாவிடம் இந்தியா ஆயில் வாங்குவதால் கோபப்பட்டு இந்தியாவிற்கு வரி விதித்துள்ளார்.
இந்தியாவிற்கு எதிராக அடுத்தடுத்தடுத்து வரி விதித்து வருகிறார். வரி வாங்கியே நமக்கே இந்த நிலைமை என்றால், ரஷ்யாவின் நிலைமையை யோசித்து பாருங்கள்.
ஆனால் ரஷ்யாவை பொறுத்தவரை அமெரிக்கா மட்டுமல்ல ஐரோப்பா மொத்தமும் சேர்ந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை..
ரஷ்யா தற்சார்பு உள்ள நாடு.. ரஷ்யாவிடம் தான் உலக நாடுகள் கையேந்தும் அளவிற்கு வளங்கள் இருக்கிறது.
ரஷ்யாவை பொறுத்தவரை உலகத்திலேயே மிகப்பெரிய நாடு. ஐரோப்பா மற்றும் ஆசியா இடையே பரந்து விரிந்து கிடக்கிறது.ரஷ்யா சுமார் 17.1 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கிறது.
இது உலகின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 11% என்று சொல்கிறார்கள். உலகின் இரண்டாவது பெரிய நாடானா கனடாவை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கிறது.
ரஷ்யா. ரஷ்யாவை நம்மூர் மொழியில் சொல்வது என்றால், குறிச்சி, முல்லை, மருதம் நெய்தல், பாலை என ஐந்து வகையான நிலங்களும் உள்ளன.
ஐந்து வகை நிலங்கள்
அதாவது டன்ட்ரா (tundra), தைக்கா (taiga), மலைகள், சமவெளிகள் மற்றும் பாலைவனங்கள் எனப் பலவிதமான நில அமைப்புகள் உள்ளன.
இந்தியாவை போல் ஒரே நேரம் ரஷ்யாவில் இருக்கிறது. ரஷ்யாவில் 11 நேர மண்டலங்கள் (time zones) இருக்கிறது. ரஷ்யா ஆர்க்டிக் பெருங்கடல் , பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் என மூன்று பெருங்கடல்களை எல்லையாக கொண்டுள்ளது. ரஷ்யா உலகின் பெரிய நாடாக மட்டுமில்லை.
மிகப்பெரிய அளவில் பல்வேறு வளங்களை கொண்டிருக்கிறது. அதனாலேயே அமெரிக்கா மட்டுமல்ல, மொத்த ஐரோப்பாவும் சேர்ந்தாலும், ரஷ்யாவை பொருளாதார தடை மூலமாகவோ, ஆயுதங்கள் மூலமோ மிரட்டி ஒன்றும் செய்ய முடியவில்லை.
ரஷ்யாவில் என்னென்ன வளங்கள் உள்ளன
ரஷ்யா உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருக்கிறது.
சைபீரியா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் எண்ணெய் வளங்கள் அதிகம் உள்ளன. இது ரஷ்யாவிற்கு அதிகப்படியான அந்நிய செலவானியை தருகிறது.
ரஷ்யாவின் பொருளாதாரத்தி இது முக்கிய பங்கு வகித்து வருகிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தடைகளை விதித்தாலும்,
இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து வாங்குகின்றன.
இது ரஷ்யாவிற்கு பெரிய வெளிநாட்டு வருவாய் ஆக இருக்கிறது. இது தான் டிரம்பின் கோபத்திற்கு காரணமாகவும் இருக்கிறது.

எப்படியாவது ரஷ்யாவை முடக்கலாம் என நினைத்த டிரம்பிற்கு சீனா மற்றும் இந்தியாவின் முடிவு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் போரில் ரஷ்யா பொருளாதார ரீதியாக சற்று பாதிக்கப்பட்ட போதிலும், சீனாவும் இந்தியாவும் ஆயில் வாங்கி, ரஷ்யாவை வாழ வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நினைக்கிறார். அது தான் இந்தியா மீதான வரி விதிப்புக்கு காரணமாக உள்ளது.
நிலக்கரி சுரங்கங்கள்
ரஷ்யாவில் ஆயில் மட்டுமல்ல.. நிலக்கரி சுரங்கங்கள் அதிக அளவில் உள்ளன. சைபீரியாவின் யாகுட்ஸ்க் போன்ற பகுதிகளில் அதிக அளவில் நிலக்கரி சுரங்கங்கள் இருக்கிறது.
ஐரோப்பாவையும் ஆசியாவையும் பிரிக்கும் இந்த மலைத்தொடர் பல்வேறு கனிமங்களின் களஞ்சியமாக இருப்பது தான் ரஷ்யாவின் பெரிய வரமாக பார்க்கப்படுகிறது.
இங்கு இரும்புத் தாது, செம்பு, தங்கம், பிளாட்டினம், வைரம், பாக்சைட் போன்ற பல அரிய கனிமங்கள் ரஷ்யாவிற்கு கிடைக்கிறது.
இரும்பு ஏற்றுமதி
ரஷ்யாவின் எஃகு மற்றும் இயந்திரத் தொழிற்சாலைகளுக்கு இந்த இரும்புத் தாது மிகவும் அவசியம் ஆகும்.
அதற்கு இங்கிருந்து தான் இரும்பு தாது அனுப்பி வைக்கப்படுகிறது. ரஷ்யாவில் ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஆயிலுக்கு அடுத்தபடியாக இரும்பு, நிக்கல், அலுமினியம், வைரம் மற்றும் பிளாட்டினம் போன்ற பல அரிய கனிமங்களை ஏற்றுமதி செய்கிறது.
இதுவும் ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு வலுவான அடித்தளமாக உள்ளது. ஆறுகள், காடுகள் அதேபோல் யூரல் மலைகளில் எமரால்ட், டோபாஸ், அமேதிஸ்ட் போன்ற விலைமதிப்பற்ற ரத்தினக் கற்களும் இருக்கின்றன.
ரஷ்யாவின் பெரும்பகுதி, அடர்ந்த ஊசியிலைக் காடுகளான “டைகா” காடுகளால் சூழப்பட்டிருக்கிறது. இந்த காடுகள் மரங்கள், மூலிகைகள் மற்றும் விலங்கினங்களுக்கு முக்கியமான வாழ்விடமாக உள்ளன.
ரஷ்யாவில் பல பெரிய ஆறுகள் மற்றும் ஏரிகள் அதிகளவில் உள்ளன. லீனா நதி போன்ற ஆறுகள் போக்குவரத்துக்கும், நீர்ப்பாசனத்திற்கும், மின் உற்பத்திக்கும் உதவியாக இருந்து வருகிறது.
அடர்ந்த வனவளமும் இருப்பதால் இயற்கையே ஆசிர்வதிக்கும் அளவிற்கு இயற்கை வளங்கள் உள்ளன.
ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி
ரஷ்யாவை பொறுத்தவரை கனிம வளங்கள், கடல் வளம், ஆயில் வளம் மட்டும் உள்ள நாடு அல்ல.. ரஷ்யா உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இருக்கிறது.
பல நாடுகள் ரஷ்யாவின் ராணுவ தளவாடங்களை நம்பி இருக்கின்றன. அமெரிக்கா எப்படி ஆயுதங்களை விற்று கோடிகளை குவிக்கிறதோ அதுபோல், ரஷ்யாவும் பல்வேறு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்று சம்பாதிக்கிறது.
அதே நேரம் மற்ற நாடுகளை போல் உணவு விஷயத்தில் மற்ற நாடுகளை நம்பி ரஷ்யா கிடையாது.
தற்சார்பு பொருளாதாரத்தை உடையது. ரஷ்யா தன்னுடைய உணவு உற்பத்தியில் பெரும்பாலும் தற்சார்புடன் இருக்கிறது.
இதனால், உலகளாவிய உணவுப் பொருட்கள் விலை ஏற்றம் போன்ற நெருக்கடிகள் ரஷ்யாவை பெரிய அளவில் பாதிப்பதில்லை.
பொருளாதார தடைகள்
இந்த காரணங்களால், அமெரிக்காவின் பொருளாதார தடைகள் ரஷ்யாவிற்கு எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
எனினும் ரஷ்யாவின் தொழில்நுட்ப முன்னேற்றம், விமானப் போக்குவரத்து மற்றும் சில குறிப்பிட்ட துறைகளில் அமெரிக்காவின் பொருளாதார தடை சிறிய அளவே பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவால் ஒன்றும் செய்ய முடியவில்லை அதனால் தான் ஐரோப்பாவின் மொத்த நாடுகளையும், உலகின் நாட்டாமையாக இருக்கும் அமெரிக்காவையும் ரஷ்யா ஒற்றை ஆளாக எதிர்த்து நிற்கிறது.
என்ன தான் எதிரி என்றாலும் அமெரிக்கா மற்ற நாடுகளை போல் ரஷ்யாவிடம் நேரடியாக சண்டைக்கு போனது கிடையாது.
ஏனெனில் ரஷ்யாவிடம் அமெரிக்கா மோதினால், அதன் விளைவுகளை, உலகமே கற்பனை கூட செய்ய முடியாததாக இருக்கும். இது இரண்டு நாடுகளுக்குமே தெரியும்.
டிரம்ப் மிரட்டல் ஏன்
ரஷ்யாவை பொறுத்தவரை வலுவான இயற்கை வளங்கள் மற்றும் பிற நாடுகளுடனான வர்த்தக உறவுகள் வைத்திருக்கிறது. அதுதான் ரஷ்யாவை காப்பாற்றி வருகிறது.
ரஷ்யா உடன் நல்ல உறவில் உள்ள இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் அங்கிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதால் ரஷ்யாவை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்ற கோபத்தில் டிரம்ப் இருக்கிறது.
இந்தியாவிற்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். அப்படியாவது ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது நிறுத்தும் என்று நினைப்பது தான் காரணம். என்ன தான் டிரம்ப் மிரட்டினாலும் இந்தியா அதற்கு அடிபணியவில்லை. மாற்று திட்டங்களை யோசித்து வருகிறது. விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி அமெரிக்கா வரியை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.