புங்குடுதீவு, முதலாம் வட்டாரத்தில் நேற்று (10) இரவு 7.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
பேருந்து உரிமையாளரான 46 வயதான அகிலன் என்பவரே கொல்லப்பட்டார். அவர் வீட்டிலிருந்த போது, ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், வாள்களால் அவரை கொடூரமாக வெட்டினர். அதை தடுக்க வந்த அயல்வீட்டில் வசிக்கும் உறவினரைான இளைஞனும், இரண்டு பெண்களும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களின் தகவலின்படி, அதே பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
அந்த நபர், உயிரிழந்தவருக்கு ஏற்கெனவே சிலமுறை கொலை மிரட்டல் விடுத்து, அது குறித்து பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
தனது உறவினரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர், அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றனர்.