மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் நின்று கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது ரயில் மோதியதில் 23 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (10) அன்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஊறணி யைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேந்திரன் கரிகரராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்

குறித்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் அடுத்து சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை (10) அன்று இரவு தண்டவாளத்தில் நின்று கொண்டு மனைவியிடம் தொலைபேசியில் பேசி சண்டை பிடித்துக் கொண்டுள்ள நிலையில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணித்த ரயிலில் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்

இதனையடுத்து குறித்த சடலத்தை மீட்டு ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைத்து விட்டு ரயில் கொழும்பு நோக்கி பிரயாணித்தது

இது தொடர்பாக ஏறாவூர் மற்றும் கொக்குவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version