யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பகுதியை சேர்ந்த இரு கடற்தொழிலாளர்கள் சென்ற படகு பழுதடைந்த நிலையில் தமிழக கடற்தொழிலாளர்கள் அவர்களை மீட்டு கரை சேர்த்துள்ளனர்.
காங்கேசன்துறையை சேர்ந்த வினோத்குமார் , சிந்துஜன் ஆகிய இருவரும் காங்கேசன்துறை கடற்கரையில் இருந்து சிறு படகில் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் அவர்களது படகு திடீரென பழுதடைந்த நிலையில் , இந்திய கடல் எல்லைக்குள் தத்தளித்தவாறு காணப்பட்டுள்ளது.
அதனை அடுத்து அவர்கள் இருவரையும் வேதாரண்யம் கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் , காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.