“நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் நேற்று வெளியானது.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் ரசிகர்கள் திரையரங்கை அதிரவிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பல்வேறு திரை பிரபலங்கள் திரையரங்குகளில் கூலி படத்தை கண்டு மகிழ்ந்தனர்.
இந்நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ருதி ஹாசன் படம் பார்க்க சென்ற இடத்தில் சங்கடமான சூழல் ஒன்றில் சிக்கினார்.
அந்த வீடியோவில், நடிகை ஸ்ருதிஹாசன் தனது நண்பர்களுடன் திரையரங்க வளாகத்திற்குள் காரில் சென்றபோது, அவர்களை ஒருவர் தடுத்து நிறுத்தினார்.
அவர் படம் பார்க்க வந்தவரா அல்லது திரையரங்க ஊழியரா என்பது தெரியவில்லை. அவரிடம் ஸ்ருதி ஹாசன், ” நான் நடிகை, இந்த படத்தில் நடித்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன். என்னை உள்ளே விடுங்க” என்று சிரித்துக் கொண்டே கேட்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்ணா Please உள்ளே விடுங்க, நான் தான் படத்தோட ஹீரோயின் | ஸ்ருதி ஹாசனுக்கு வந்த சோதனை#ShrutiHaasan #Actress #TamilCinema #Kollywood #coolie #movie #cinema #news #mmnews #maalaimalar pic.twitter.com/5JeyI9QIzE
— Maalai Malar தமிழ் (@maalaimalar) August 15, 2025