யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் இன்று (16) மாலை மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் காணப்படும் வாகன திருத்தும் இடத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது மேற்படி இளைஞரை மின்சாரம் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது

மரணமடைந்துள்ள இளைஞரின் சடலம் தற்போது யாழ் போதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version