நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 21ஆம் திருவிழாவான இன்றைய தினம் திங்கட்கிழமை காலை கஜவல்லி மகாவல்லி உற்சவம் நடைபெற்றது.

காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து தங்க அன்ன வாகனத்தில் கஜவல்லி மகாவல்லி எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை தங்க ரத உற்சவமும் நாளைய தினம் செவ்வாய்க் கிழமை காலை மாம்பழத் திருவிழாவும் மாலை ஒருமுக திருவிழாவும் நடைபெறவுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version