“கிரீஸில் இருந்து ஜெர்மனிக்கு நடுவானில் பறந்து கொண்டிருந்த போயிங் 757 ரக விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விமானத்தில் 273 பயணிகளுடன் 8 ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர். எஞ்சினில் தீப்பிடித்தவுடன் கவனமாக செயல்பட்ட விமானிகள் விமானத்தை அவசரமாக தரையிறங்கி பயணிகளின் உயிரை காப்பாற்றினர்.

கிரீஸில் இருந்து புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இத்தாலியின் பிரிண்டிசி நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.பிரிண்டிசி நகரத்தில் தங்குவதற்கான போதிய ஹோட்டல்கள் இல்லாததால் விமான நிலையத்திலேயே பயணிகள் தூங்க வேண்டிய சிரமத்திற்கு ஆளாகினர்.

இதற்காக விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது. பின்னர் அவர்கள் வேறு விமானம் ஜெர்மனிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இரவைக் கழிக்க வேண்டிய பயணிகளுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் காண்டோர் மன்னிப்புக் கேட்டுள்ளது. மறுநாள் அவர்கள் டஸ்ஸல்டார்ஃப் நகருக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.இதனிடையே நடுவானில் விமானத்தின் எஞ்சினில் தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version