2022 ஆம் ஆண்டு கொழும்பு, காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை தாக்கியவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில், தேசபந்து தென்னகோன் தனது கடமைகளைச் செய்யத் தவறியமையினால் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை (20) தென்னகோன் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்தது.

முன்னாள் பொலிஸ் மா அதிபரின் சட்டதரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை இன்று புதன்கிழமை (20) காலை கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர பரிசீலித்தார்.

அதன்படி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கோரிய முன் பிணை மனுவை நீதவான் நிராகரித்தார் இந்நிலையிலேயே, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version