ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் சுமார் 38 ஆண்டுகள் கழித்து கூலி படத்தில் நடத்த நிலையில், அவர்களுக்கு இடையே இருக்கும் மோதல் குறித்து பாலாஜி பிரபு பேசி இருக்கிறார்.

1986ஆம் ஆண்டில் மிஸ்டர் பாரத் படத்தில் கடைசியாக இணைந்து நடித்தனர்
அதன்பின் 38 ஆண்டுகள் கழித்து கூலி படத்தில் இணைந்துள்ளனர்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் இருவரும் 38 ஆண்டுகள் கழித்து கூலி படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர். இது கூலி படத்தின் அறிவிப்பின்போதிலிருந்தே பேசும்பொருளாகி வருகிறது.

இம்மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற கூலி படத்தின் நிகழ்ச்சியில் கூட, ரஜினிகாந்த், சிவாஜி படத்தில் சத்யராஜ். வில்லனாக நடிக்க மறுத்துவிட்டார் என கூறி இருந்தார்.

இந்த நிலையில், இருவருக்கும் இடையேயான மோதல் குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசி இருக்கிறார். அவர் கூறிய கருத்துக்கள் வைரலாகி வருகிறது.

தயாரிப்பாளர் பாலாஜி பிரபு

இது தொடர்பாக பேசிய பாலாஜி பிரபு, இருவரும் சினிமாவில் அறிமுகமான புதிதில் பல படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர்.

ஆனால் சத்யராஜின் மனதில் என்ன இருந்தது என நம்மால் சொல்ல முடியாவிட்டாலும், ரஜினியின் மீது ஏதோ ஒரு கோபம் இருந்தது என்பதை மட்டும் மறுக்க முடியாது.

சத்யராஜ் ரஜினிகாந்த் மேல் இருந்த கோபத்தை அவ்வப்போது மேடைகளின் மூலம் வெளிப்படுத்தி வருவார்.

சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க ரஜினிக்கு இணையான சம்பளம் கொடுக்கிறோம் என கூறியும் அதனை மறுத்தார் சத்யராஜ்.

ஆனால் கூலி படத்தில் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் செய்ய வேண்டிய கதாபாத்திரத்தை அவர் செய்திருக்கிறார்.

அந்த படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் ஒன்றுமில்லை. அவர் ரஜினி படம், சன் பிக்சர்ஸ், லோகேஷ் கனகராஜ் இவர்கள் படத்தில் நடித்தால், தனக்கு ஒரு பெயர் கிடைக்கும் என நினைத்திருக்கலாம் என பாலாஜி பிரபு கூறினார்.

என் படத்தில் வில்லனாக நடிப்பாரா?

முன்னதாக 2006, 2007 காலகட்டத்தில் சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என சத்யராஜிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், நான் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறேன்.

ஆனால் நான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ரஜினி வில்லனாக நடிப்பாரா? என பதிலுக்கு கேட்டுள்ளார். இதை கேட்ட ஷங்கர் எதுவுமே கூறாமல் வாய் அடைத்து போனாராம்.

கூலி பட நிகழ்ச்சியில் ரஜினி, சத்யராஜ்

சமீபத்தில் நடந்த கூலி பட நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் பேசும்போது, எனக்கு நிகரான சம்பளம் கொடுப்பதாக பேசப்பட்டபோது, சிவாஜி படத்தில் நடிக்க சத்யராஜ் மறுத்தார் என கூறினார்.

ரஜினிக்கு முன்பாக மேடையில் பேசிய சத்யராஜ், ரஜினிகாந்த்தை அனைவரும் சூப்பர் ஸ்டார் என கூறுகிறார்கள். அவர் முதலில் சூப்பர் நடிகர். அதனால்தான் ஒருவர் 50 வருடமாக சூப்பர் ஸ்டார் படத்துடன் இருக்க முடியும் என புகழ்ந்து பேசினார்.

தாக்கி பேசிய சத்யராஜ்

முன்னதாக காவேரி பிரச்சனையின்போது, சினிமா திரையுலகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த மேடையில் பேசிய சத்யராஜ், இந்த மேடையில் யாரை பெயரை சொல்லி கைதட்டு வாங்க வேண்டும் என எனக்கு தெரியும். அப்படி நான் வாங்குவதற்கு நாக்க புடுங்கிட்டு சாகலாம் என ரஜினியை தாக்கி பேசியது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version