இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்திருந்த இவர், 100 சதவீதம் காதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து கொரில்லா என்ற படத்தில் நடித்திருந்தார்,

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் இந்திய சினிமாவின் பிரபலமான நடிக ஷாலினி பாண்டே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோது படத்தில் முத்தகாட்சி இருக்கும் என்று இயக்குனர் சொல்லவே இல்லை. படத்தின் ஷூட்டிங் போன பிறகு தான் சொன்னார் என்று கூறியுள்ளார்.

2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி என்ற படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்திருந்த இந்த படம் தெலுங்கில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அதன்பிறகு இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்திருந்த இவர், 100 சதவீதம் காதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து கொரில்லா என்ற படத்தில் நடித்திருந்தார்,

அதன்பிறகு தமிழில் வாய்ப்பு இல்லாத ஷாலினி இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த நிலையில், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான இட்லி கடை திரைப்படத்தில், மீரா என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஷாலினி பாண்டே, அர்ஜூன் ரெட்டி பட வாய்ப்பு மற்றும் அந்த படத்தின் முத்த காட்சிகள் குறித்து பேசியுள்ளார்.

இதில் பேசிய அவர், நான் எனது எஞ்சினியரிங் படிப்பை முடித்து 2-3 மாத இடைவெளியில் எனக்கு ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்காக அழைப்பு வந்தது. இதற்காக நான் ஹைதராபாத் வந்தபோது என் அப்பா என்னுடன் வந்தார்.

நாங்கள் மூன்று நாட்கள் படம் தொடர்பான சந்திப்பு நடத்தினோம். ஒரு நாள் எனக்கு ஃபோட்டோஷூட் இருந்தது, எனது தந்தையும் என்னுடன் வந்திருந்தார். இரண்டாவது நாள், அவர் எனக்குக் கதையை முழுவதும் சொல்ல, மூன்றாவது நாள் நான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்.

அப்போது இயக்குநர் சந்தீப்பிடம் “முத்தக் காட்சிகள் எதுவும் இருக்கக் கூடாது. அச்சுறுத்தும் காட்சிகள் எதுவும் இருக்கக் கூடாது என்று என் அப்பா ஆரம்பத்திலேயே சொன்னார்.

இதை கேட்ட சந்தீப், “சரி, சரி, சரி” என்று ஒத்துக்கொண்டார். ஆனால், ஷூட்டிங் போன பிறகு, சந்தீப்பும் என்னிடம் “பார், இந்த முத்தக் காட்சிகள் உள்ளன” என்று சொன்னார்.

அவர் அதற்கு முன்பே இத்தனை முத்தக் காட்சிகள் உள்ளன என்று சொல்லியிருந்தால், நான் அதைச் செய்திருக்க மாட்டேன்.

ஏனென்றால், அப்போது அவர் முத்தத்தை ஒரு பொருளாக ஆக்கி, திணிப்பது போல ஆகும் அல்லவா? அவர் அந்த முத்த காட்சிகளை கதையின் ஓட்டமாகச் சொன்னார்,

அதில் ஒரு உணர்ச்சியாக முத்தம் வந்தது. நாங்கள் அதைப் பற்றி எப்படிப் பேசினோமோ, அதேபோல்தான் படத்திலும் வந்தது.

முத்தம்கூட எனக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை என்று நான் உணர்கிறேன். ஏனென்றால், அதைப் பார்க்க அழகாகக் காட்டும் வரை சிறப்பாகது. ஆனால், நீங்கள் அதை தரக்குறைவாக, ஒரு பொருளாகக் காட்டினால், அது ஒரு பெரிய விஷயமாகும் என்று கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version