திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக் கண்டி கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலியானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் வியாழக்கிழமை (21) இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இறக்ககக் கண்டி வாழை ஊத்து பகுதியை சேர்ந்த என்.அப்சான் வயது (22) என்றும் தெரியவருகிறது.

பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version