பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதற் பகுதிக்குள் வர்த்தமானியில் வெளி யிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப் படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலைய கத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரி மைப் பிரச்சினைகள் தொடர் பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை பாராளு மன்ற உறுப்பினர் சிவஞா னம் சிறிதரனால் நேற்று பாராளுமன்றில் முன்வைக் கப்பட்டது.

இந்த விவாதத்தில் கலந் துகொண்டு உரையாற்றும் போதே, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலியு றுத்தும் வரை அல்லாமல், எமது கொள்கை பிரகடனத் தில் கூறியதைப் போன்று பயங்கரவாத தடைச் சட் டத்தை நீக்குவதற்கு அர சாங்கம் நடவடிக்கை எடுக் கும்.

அது தொடர்பில் ஆராய அரசாங்கம் ஆட்சியமைத்து குறுகிய காலப்பகுதியில் தனியான குழுவொன்று நியமிக்கப்பட்டது.அந்த குழு பல்வேறு சந்தர்ப்பங்களில் கூடியிருந்தது.

திருத்தங்கள் கொண்டுவ ரப்பட்டு இந்த மாதத்திற்கு இறுதி செய்யப்பட்டு,
செப்டம்பர் ஆரம்ப பகுதிக் குள் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூ லத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது அமுலில் உள்ள து. அந்த சட்டத்தின் ஊடாக இனம், மதம் என்ற அடிப் படையில் எவரும் கைது செய்யப்படவில்லை. மாறாக
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங் களில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்காக பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version