வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் உள்ள மீனவ வாடியில் இருந்தவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு கத்தி வெட்டில் முடிந்ததில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

நேற்று (22) இரவு இடம்பெற்ற சம்பவத்தில் செங்கலடி மட்டக்களப்பை சேர்ந்த 48 வயதுடைய சின்னத்தம்பி வடிவேல் என்பவர் நெஞ்சு பகுதியில் கத்தி வெட்டுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த சைத்தான் 41 வயதுடைய மகேஸ்வரன் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்தவர்களும் புத்தளம் உடப்பு பகுதியை சேர்ந்தவர்களும் வாடியமைத்து கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் நேற்று இரவு மது போதையில் இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலே இக் கத்தி வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி பதில் நீதிபதி சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்து பிரேத சோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இதே வேளை கத்தி வெட்டினை மேற்கொண்ட உடப்பு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபர் மருதங்கேணிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version