ஒருகாலத்தில் விஜயை புகழந்து பேசி வந்த சீமான் தற்போது த. வெ.க. கட்சியை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.

இது அக்கட்சி தொண்டர்களை கோபமடைய செய்துள்ளது.அதுவும் அண்மையில், நாங்கள் புலிகள், அதனால் அணில்கள் குறுக்கே ஓடவேண்டாம் என்று த. வெ.க. தொண்டர்களை சீமான் விமர்சித்திருந்தார்.

சீமானின் விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் த. வெ.க.வின் மதுரை மாநாட்டில் அக்கட்சி தொண்டர்கள் சீமான் ஒழிக என கோஷம் எழுப்பினர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், “அணில் ஏன் அங்கிள், அங்கிள் என கத்துகிறது. ஜங்கிள், ஜங்கிள் என்று தானே கத்த வேண்டும்.

கடந்த மாநாட்டில் சி.எம். சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக எப்படி மாறினார்” என்று விஜயை விமர்சித்தார்.

இந்நிலையில், இன்று நாம் தமிழர் கட்சி கட்சி சார்பில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் பேசிய சீமான், “இந்தக் காட்டிற்குள் புலிகள் நுழைந்ததும் ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை.

அணில்களுக்கும் சேர்த்துதான் நாம் காடு வளர்க்க பாடு படுகிறோம்” என்று தெரிவித்தார். விஜயை தொடர்ந்து அணில் என்று சீமான் கிண்டலடித்து வருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “,

Share.
Leave A Reply

Exit mobile version