7 ஆண்டுகளுக்குப் பின் சீனாவில் பிரதமர் மோதி – உற்சாக வரவேற்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்ற பிரதமர் மோதி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றுள்ளார்.

சீனாவை அடைந்த பிறகு, பிரதமர் மோடி ஒரு எக்ஸ் தள பதிவில், தான் தியான்ஜினை (சீனா) அடைந்துவிட்டதாகவும், இப்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டிற்கான கூட்டங்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்புகளுக்காகக் காத்திருப்பதாகவும் கூறினார்.

சீனாவின் தியான்ஜினில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோதி கலந்து கொள்கிறார்.

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, உச்சிமாநாட்டின் போது பிரதமர் பல நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார்.

இந்தியா, 2017 முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராக உள்ளது.
சீனா இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாகும்.

பட மூலாதாரம், @narendramodi
படக்குறிப்பு, சீனா இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாகும்.

பிரதமர் மோதிக்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான கடைசி சந்திப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவில் நடந்தது.

2018-க்குப் பிறகு பிரதமர் மோதி சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அதாவது, கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மோதி சீனா சென்றுள்ளார்.

லடாக்கின் ஏப்ரல் 2020க்கு முந்தைய நிலை இன்னும் மீட்டெடுக்கப்படாத நிலையில் பிரதமர் மோதியின் சீன பயணம் நடைபெறுகிறது.

அதேசமயம், சீனா இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாகும். கடந்த ஆண்டு சீனாவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் சுமார் 127.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version