யாழ். செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வில் புதிதாக பத்து மனித என்புத் தொகுதிகள் அடை யாளம் காணப்பட்டதோடு, ஆறு மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயா னத்தில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர் பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 38ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது. அகழ் வில் பத்து மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட் டுள்ளன.

இதன்மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடை யாளம் காணப்பட்டுள்ள மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 197ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஏற்கனவே அடையாளம் காணப் பட்ட ஆறு மனித என்புத் தொகுதி கள் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட் டுள்ளன.

இதன் மூலம் செம்மணி புதைகு ழியிலிருந்து இதுவரை மொத்தமாக 180 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண் காணிப்பில், துறைசார் நிபுணரும் பேரா சிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழு வினரும், யாழ்ப்பாணப்பல்கலைக்க ழக மருத்துவபீட மற்றும் கலை ப்பீட தொல்லியற்துறை மாணவர்களும் அகழ்வுப் பணிகளின்போது முன்னி லையாகிவருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version