உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரியான சஹ்ரானுடன் இணைந்திருந்த இராணுவ தளபதிகளுடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தொடர்பில் இருந்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பிரத்தியேக இணைய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த அவர், அங்கு கருத்து தெரிவித்தபோதே இதனைக் கூறினார். அந்நிகழ்ச்சியில் மேலும் கருத்து தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா;

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், பாராளுமன்றத்தில் ஏற்கனவே பல விடயங்களைக் குறிப்பிட்டுள்ளேன்.

இப்போது அவற்றை மீண்டும் சொன்னால், எனக்கு எதிராக வழக்கு தொடர்வார்கள். இதற்காக காலத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை.

இது தொடர்பிலான பெயர் விபரங்களையும் என்னால் குறிப்பிட முடியும்.இவ்வாறான விபரங்களை வௌியிட்டால் எனக்கு எதிராக மான நஷ்டஈடு வழக்குத் தாக்கல் செய்வர்.

வழக்கென்றும் விசாரணை என்றும் காலங்களை கடத்த நான் விரும்பவில்லை.ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டமை உண்மையாகும். இதில்,புலனாய்வுத் துறையினர் முக்கியமானவர்கள்.

இராணுவத்தில் உள்ள தளபதிகள் சிலருக்கும் தொடர்புகள் உள்ளன. இவர்களில் சிலர் கிழக்குப் பகுதிகளில் கடுமையாற்றியவர்கள்.

சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கவும் இந்த தளபதிகளே சம்பந்தப்படுத்தப்பட்டனர். சஹ்ரான் என்ற பெயரையும் அந்தக் குழுவையும் வளர்த்தவர்கள் இவர்களே.

இதற்கமையவே, தாக்குதலின் பின்னர் இவர்கள் அதற்கான பிரதி பலன்களை அனுபவித்தனர்.தேர்தலில்,கோட்டாபய வெற்றி பெற்ற பின்னர் சில தளபதிகள் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டனர்.ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 60 பக்கங்கள் கொண்ட தனி அறிக்கை ஒன்றையும் நான்,சமர்ப்பித்துள்ளேன்.

Share.
Leave A Reply

Exit mobile version