159 ஆவது பொலிஸ் தினத்தை கொண்டாடும் வகையில் நாளை (03) பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் சிறப்பு நினைவு விழா நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்விற்கான ஆயத்தமாக கொழும்பு போக்குவரத்துப் பிரிவு ஒரு சிறப்பு போக்குவரத்துத் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்தப் போக்குவரத்துத் திட்டத்தின்படி, பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குள் உள்ள தும்முல்லை சந்தியிலிருந்து திம்பிரிகஸ்யாய சந்தி வரையிலான ஹேவ்லொக் வீதியில் வாகனப் போக்குவரத்து பின்வருமாறு கட்டுப்படுத்தப்படும்.

பொலிஸ் களப் படைத் தலைமையகத்திற்கு எதிரே உள்ள வெளிச்செல்லும் பாதையில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தம், நாளை (03) பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 7:00 மணி வரை ஹேவ்லொக் வீதியில் உள்ள ஃபொன்சேகா வீதி சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு தற்காலிகமாக மாற்றப்படும்.

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குள் உள்ள தும்முல்லை சந்திக்கு திம்பிரிகஸ்யாய சந்திக்கு இடையில், நாளை பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை கனரக வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும்என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version