மேற்கு சூடானின் மர்ரா மலை பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தையே அழித்த நிலச்சரிவில் குறைந்தது 1,000 பேர் கொல்லப்பட்டனர்.

ஒரே ஒருவர் மாத்திரம் உயிர் பிழைத்ததாக சூடான் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது.

பல நாட்கள் பெய்த கனமழைக்குப் பின்னர், ஓகஸ்ட் 31 அன்று நிலச்சரிவு ஏற்பட்டதாக அப்தெல்வாஹித் முகமது நூர் தலைமையிலான இராணுவக்குழு இதனை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்ற பலியானவர்களின் உடலங்களை மீட்க உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிராமம் இப்போது முழுமையாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருட உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த அழிவு குறித்த மக்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

ஏற்கனவே பசி பட்டினி காரணமாக, மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version