சில சமயங்களில் வாய் வார்த்தை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. எதிர்வினைதான் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ரஷ்யாவின் தூரக்கிழக்கில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் பேசிய விளாடிமிர் புதின், “யுக்ரேனுக்கு அமைதி காக்கும் படையினரையும், வீரர்களை அனுப்புவது பற்றி யோசிக்கவே வேண்டாம்” என மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்.

“அங்கு சில படைகள் தென்பட்டால் அதிலும் குறிப்பாக சண்டை நடந்துகொண்டிக்கும்போது தென்பட்டால், இவை அழிவுக்கான சரியான இலக்குகளாக இருக்கும்” என ரஷ்ய அதிபர் புதின் கூறினார்.

அதன்பிறகுதான் எதிர்வினை தொடர்ந்தது.

விளாடிவோஸ்டாக்கில் நடந்த பொருளாதார மன்றத்தில் பார்வையாளர்கள் கைதட்டல்களால் ஆரவாரம் செய்தனர். ரஷ்ய அதிகாரிகளும் வணிகத் தலைவர்களும் மேற்கத்திய படைகளை அழிக்கும் அச்சுறுத்தலை வரவேற்றனர்.

அந்த அரங்கத்தில் நடந்த காட்சியை பார்கையில் அந்த கைத்தட்டல் சற்று நடுங்க வைத்தது.

‘விருப்பக் கூட்டணி’ என்று அழைக்கப்படும் யுக்ரேனின் நட்பு நாடுகள், யுக்ரேனுக்கு போருக்குப் பிந்தைய பாதுகாப்புப் படையை உருவாக்குவதாக உறுதியளித்த மறுநாளே இது நடந்தது.

“யுக்ரேன் அதிபர் ஸெலெஸ்கியை சந்திக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அது ரஷ்யாவில் மட்டுமே” என ரஷ்ய அதிபர் புதின் கூறியதும் பார்வையாளர்கள் மீண்டும் கைதட்டினர்.

“இந்த சந்திப்புக்கான சிறந்த இடம் ரஷ்யா தலைநகரான மாஸ்கோதான்” என அவர் கூறினார்.

ரஷ்யாவிற்கு வெளியே புதினின் இந்த முன்மொழிவு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. மாறாக அது நகைச்சுவையாக கருதப்பட்டு நிராகரிக்கப்பட்டது.

ஆனால் பல வழிகளில் யுக்ரேன் உடனான போர் மீதான புதினின் நிலைப்பாட்டை இது எடுத்துரைக்கிறது. “ஆம் எங்களுக்கு அமைதி வேண்டும். ஆனால் அது எங்கள் விதிகளுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். இதை நீங்கள் நிராகரித்தால் பின் அமைதி இருக்காது” என்பதுதான் அது.

புதினின் இந்த சமரசமற்ற நிலைப்பாடு, பல்வேறு விஷயங்களுக்கு வழிவகுக்கிறது.
புதின் சீனாவில் உலக தலைவர்களை சந்தித்து கைகுலுக்கிக்கொண்டார்.


புதின் சீனாவில் உலக தலைவர்களை சந்தித்து கைகுலுக்கிக்கொண்டார்.

முதலாவதாக, யுக்ரேனில் ரஷ்யப் படைகள் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருவதாக புதின் நம்புகிறார்.

2வது ராஜதந்திர வெற்றி. இந்த வாரத்தில் புதின் சீனாவில் உலக தலைவர்களை சந்தித்து கைகுலுக்கிக்கொண்டார். இவர்கள் புன்னகையுடன் உரையாடிக்கொண்டார்கள். சீனா, இந்தியா மற்றும் வட கொரியா உடன் ரஷ்யா நல்ல உறவுடன் இருக்கிறது என்பதை காண்பிப்பதே இதன் நோக்கமாகும்.

அதன்பிறகு அமெரிக்கா. கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதினை அலாஸ்காவில் நடைபெறும் உச்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார்.

யுக்ரேன் போரில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் முயற்சியில் மேற்கு நாடுகள் தோல்வியடைந்துவிட்டன, என்பதற்கான ஆதாரமாக இந்த நிகழ்வை உள்நாட்டில் புதினின் ஆதரவாளர்கள் விவரித்தனர்.

முன்னதாக இந்த போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப், புதினுக்கு நிறைய எச்சரிக்கைகள் மற்றும் காலக்கெடுக்களை விதித்தார். ரஷ்யா அமைதியை நிலைநாட்டவில்லை என்றால் நிறைய தடைகள் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

ஆனால் டிரம்ப் அந்த எச்சரிக்கைகளை தொடரவில்லை. இதுவே ரஷ்யாவிற்கு நம்பிக்கை ஏற்படுத்த மற்றொரு காரணமாக அமைந்தது.

டிரம்பின் சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கான அழைப்பை புதின் நிராகரித்தார்.

.

டிரம்பின் அமைதியை நிலைநாட்டும் முயற்சியை புதின் பொதுமேடையிலேயே பாராட்டியுள்ளார். எனினும் அவர் டிரம்பின் சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கான அழைப்பை நிராகரித்தார். மேலும் யுக்ரேன் மீதான போரில் சமரசம் செய்வதற்கான எந்த முனைப்பையும் அவர் காட்டவில்லை.

அப்படியானால் இதில் அமைதிக்கான வாய்ப்பு எங்கே இருக்கிறது?

புதின் சமீபத்தில் தன்னால் பாதையின் முடிவில் வெளிச்சத்தை பார்க்க முடிவதாக குறிப்பிட்டார்.

அதாவது ரஷ்யா ஒருபுறமும் யுக்ரேன் மற்றும் ஐரோப்பா (ஓரளவுக்கு அமெரிக்காவும்) வெவ்வேறு பாதைகளில், வெவ்வேறு சாலைகளில், வெவ்வேறு நிலைப்பாடுகளுடன் இருப்பதாக தோன்றுகிறது.

யுக்ரேனும் ஐரோப்பாவும் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் சண்டையை நிறுத்துவதில் கவனம் செலுத்துகிறது. மேலும் போருக்கு பிந்தைய ஊடுருவலை எதிர்கொள்ளும் அளவிற்கு யுக்ரேனிய ராணுவம் பலமாக இருப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

சுரங்கத்தின் முடிவில் வெளிச்சத்தை பார்க்க முடிவதாக புதின் கூறியது, என்னைப் பொறுத்தவரை யுக்ரேனில் ரஷ்யாவின் வெற்றியைதான் அவர் குறிப்பிடுகிறார் என்கிறார் ரோசென்பெர்க். இன்னும் சொல்லப்போனால் ரஷ்யாவுக்கு சாதகமான புதிய உலகளாவிய கட்டமைப்பை உருவாக்குவதை அவர் குறிப்பிடுகிறார் என்றார்.

அமைதியை பொறுத்தவரை இந்த இருவேறு பாதைகளும் எங்கு, எப்போது ஒன்றிணையும் என்பது பற்றி சொல்ல முடியாது.

 

Share.
Leave A Reply

Exit mobile version