இலங்கை மின்சார சபையானது, 2025ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களில் 6.8% வரி அதிகரிப்பை முன்மொழிந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்மொழியப்பட்ட இத் திருத்தங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தைக் கேட்பதற்கு குறித்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் எழுத்துப்பூர்வமாகவும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்மொழி கருத்துக்களைப் பெறுவதற்கு ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய ஒன்பது பொது ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும்.

இவ் வாய்மொழி ஆலோசனை அமர்வுகள் செப்டெம்பர் 18 ஆம் திகதி ஆரம்பமாகும்.

அதன்படி, 2025ஆம் ஆண்டின் மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை தொடர்பான எழுத்துப்பூர்வ கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை ஒக்டோபர் 7,2025 இற்கு முன் பின்வரும் முறைகள் மூலம் சமர்ப்பிக்கலாம் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்னஞ்சல் – info@pucsl.gov.lk

வட்ஸ்அப் – 0764271030

ஃபேஸ்புக் – www.facebook.com/pucsl

தபால் மூலம் – மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை – 2025 இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு, 6ஆவது மாடி, சிலோன் வங்கி வர்த்தக கோபுரம், கொழும்பு -03.

Share.
Leave A Reply

Exit mobile version