கொழும்பின் மையத்தில் உள்ள பெய்ர வாவியிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் ஒரு கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளதுடன் இதனால் வாவியை சுற்றியுள்ள விருந்தகங்கள் செயல்படுவது கடினம் என்று மேல் மாகாண திண்மக்கழிவு முகாமைத்துவ அதிகாரசபையின் தலைவர் சதுர கஹந்தவராச்சி கூறியுள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், இந்த துர்நாற்றம் குறித்து அதிகார சபைக்கு ஏராளமான முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், இதன் விளைவாக சில விருந்தகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகப்படியான துர்நாற்றம் அருகிலுள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு பிரச்சினையாக மாற்றியுள்ளதாக குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நிலைமையை நிவர்த்தி செய்ய, குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான சுத்திகரிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண திண்மக்கழிவு முகாமைத்துவ அதிகாரசபையின் தலைவர் சதுர கஹந்தவராச்சி கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version