முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் புதல்வரும் பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் நாரஹேன்பிட்ட இல்லத்திற்கு விஜயம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஜி.எல். பீரிஸின் அழைப்பின் பேரில் நாமல் ராஜபக்ஷ, நேற்று முன்தினம் அங்கு சென்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் குழு ஒன்று ஜி.எல். பீரிஸின் இல்லத்திற்குச் சென்றிருந்தது.

சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்ட தாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பங்களிப்பை எவ்வாறு பெறுவது மற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அவர்களின் திட்டங்கள் குறித்தும் நாமல் ராஜபக்ஷ நீண்ட நேரம் கலந்துரையாடியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version