மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதுடன் சாட்சியமளிக்க இருந்த தாயை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வரும் 22 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் சிறிய தந்தைக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “மட்டக்களப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு 11 வயது சிறுமி ஒருவரை தாகதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் குறித்த சிறிய தந்தையார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலையாகியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் இடம்பெற்று வந்த வழக்கை கடந்த 6 மாத்திற்கு முன்னர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது.

குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது அங்கு சிறுமியின் தாயார் சிறுமிக்கு அப்படி ஒரு சம்பவம் இடம்பெற இல்லை என சாட்சியமளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறிய தந்தையார் சிறுமியின் தாயாரை பொய் சாட்சியம் அளிக்குமாறு அச்சுறுத்தியதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் சிறிய தந்தையாரை எதிர்வரும் 22 ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டு அடுத்த வழக்கு 22ஆம் திகதி முன்னிலையாகுமாறு கட்டளையிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version