கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய அதிகாரி தங்க கடத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

விமான நிலையத்தின் பாதுகாப்பிற்கே பொறுப்பான ஒரு அதிகாரியே 21.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க பிஸ்கட்டுகளைக் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் அவரை சோதனை செய்தபோது, இந்த கடத்தல் முயற்சி அம்பலமானது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புப் பிரிவில் தலைவராகப் பணியாற்றி வரும் 54 வயதுடைய அந்த நபரே கைது செய்யபப்ட்டதாக தெரியவருகின்றது.

குறித்த அதிகாரி , 51 தங்க பிஸ்கட்டுகளைத் தனது கால்களில் இறுக்கமாகச் சுற்றிக்கொண்டு கடத்த முயன்றபோது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டார்.

அவர் அணிந்திருந்த சாக்ஸ்கள் மற்றும் காற்சட்டைக்குள் மறைக்கப்பட்டிருந்த இந்தத் தங்கத்தின் மொத்த எடை 5 கிலோ 941 கிராம் ஆகும். கைதானவர் இதற்கு முன்பும் பலமுறை இதுபோன்று கடத்தல்களில் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

விசாரணையில், இந்த தங்கத்தை வேறு ஒரு நபர் இவரிடம் கொடுத்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட விமான நிலைய அதிகாரி தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறபடுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version