தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் (இராசையா பார்த்தீபன்) 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (15) ஆரம்பமாகின்றது.

இன்று காலை 9 மணியளவில் யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயம் அருகே அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி நடைபெற்று, தொடர்ந்து, நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் ஆரம்பமாகும்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளரான திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முன்வைத்து உணவையும் நீரையும் தவிர்த்துப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

அவரின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி உயிர்நீத்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version