அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சவற்காலைக்கு அருகாமையில் வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் தம்பிலுவிலை சேர்ந்த 24வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.