மறுமலர்ச்சி நகரத்தை, உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உள்ளூராட்சி மன்ற வாரம் இன்று (15) ஆரம்பமாகவுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு என்பன, இந்த திட்டம் இன்று முதல் செப்டம்பர் 21ஆம் திகதி வரை நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

சமூகங்களின் அன்றாடத் தேவைகளை நிவர்த்தி செய்யும், வாழ்க்கைச் சூழலைப் பாதுகாக்கும் மற்றும் எதிர்கால நகர்ப்புற வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வையை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதி அமைச்சர் பி. ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி நகரம் என்ற கருப்பொருளுடன் உள்ளூராட்சி மன்ற வாரத்தை நாங்கள் ஆரம்பிக்கின்றோம். சமூகங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும், வாழ்க்கைச் சூழலைப் பாதுகாக்கும் மற்றும் எதிர்காலத்திற்கான நிலையான தொலைநோக்குப் பார்வையைப் பாதுகாக்கும் ஒரு நகரத்தை உருவாக்க, பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version