அமெரிக்காவில், சட்ட​விரோதமாக குடியேறியதாக, 33 ஆண்டுகளுக்கு பின், இந்தியாவைச் சேர்ந்த மூதாட்டி கைது செய்யப்பட்டார்.

பஞ்சாபைச் சேர்ந்த ஹர்ஜித் கவுர் என்பவர், தன் இரு மகன்களுடன், 1992ல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் ​பிரான்சிஸ்கோவுக்கு குடிபெயர்ந்தார்.

33 ஆண்டுகளாக அவர் அங்கு வசித்து வருகிறார். இரு மகன்களுக்கும் திருமணமாகி ஐந்து பேரக் குழந்தைகள் உள்ளனர்.

வழக்கமான சோதனைக்கு வரும்படி, ஹர்ஜித் கவுரை அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகள் சமீபத்தில் அழைத்தனர்.

அதன்படி ஆவணங்களுடன் சென்ற அவரை, சட்ட​விரோதமாக குடியேறியதாக அதிகாரிகள் கைது செய்தனர். ஹர்ஜித் கவுரை விடுவிக்கக் கோரி அவரது குடும்பத்தினரும், அமெரிக்கவாழ் இந்தியர்களும் போராட்டம் நடத்தினர்.

உள்ளூர் இந்திய துணிக்கடையில் பணிபுரிந்து வந்த ஹர்ஜித் கவுர், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அமெரிக்க குடியேற்றத் துறைக்கு அறிக்கை அளித்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மூதாட்டியை கைது செய்தது, அதிபர் டிரம்பின் குடியுரிமை கொள்கைகளுக்கு தவறான முன்னுதாரணம் என, இந்தியர்கள் குற்றஞ்சாட்டினர்.

Share.
Leave A Reply

Exit mobile version