காலி, தலங்கம பொலிஸ் பிரிவு பகுதியில் இராணுவ முகாமில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். .

நேற்று மதியம் கொல்லப்பட்ட நபர் இராணுவ திட்ட கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட ஒரு சிவில் பேருந்து ஓட்டுநர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ஓட்டுநருக்கும் மற்றொரு பேருந்து ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் இந்த கொலை நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தலை மற்றும் உடலில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்த கொலை செய்யப்பட்டுள்ளது.

பலத்த காயமடைந்த நபர் பின்னர் இராணுவ அதிகாரிகளால் தலங்கம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு கொல்லப்பட்ட நபர் புஹுல்வெல்ல பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவராகும்.

கொலை செய்த 28 வயது சந்தேக நபர் தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version