சந்தேகநபரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவத்துடுவ மில்லகஹவத்த பகுதியில் புதன்கிழமை (17) பிரதேசவாசிகளிடம் பணம் பறிக்கும் நோக்குடன் நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி அச்சுறுத்தியுள்ளார். சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 49 வயதுடைய மில்லகஹவத்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக வருகைத்தந்திருந்த பொலிஸாரிடமும் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய நிலையில், பொலிஸார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
மதுவை கொள்வனவு செய்வதற்கான பணத்தை பிரதேசவாசிகளிடமிருந்து பலவந்தமாக பெறும் நோக்குடன் சந்தேகநபர் இவ்வாறு செயற்பட்டுள்ளதுடன், இதற்கு முன்னரும் நான்கு நபர்களை கூரிய ஆயுதத்தால் தாக்கி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. கைதான 32 வயதுடைய சந்தேகநபர் தொடர்பில் கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.