முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா உத்தரவினால் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு இன்றையதினம் (19) பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட கிரிப்பன்வெவ மகாவலி அதிகாரசபை சொத்துக்களுக்கு இழப்பீடு பெற அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வழக்கை விசாரிக்கும் நிரந்தர பிரதான நீதவான் விடுமுறையில் இருந்ததால் மேலதிக நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் சந்தேக நபருக்கு பிணை வழங்குவதா இல்லையா என்பது குறித்த உத்தரவு அன்றைய தினம் பிறப்பிக்கப்படும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version