பாலுறவில் உச்சக்கட்டம் என்பது ஆண்களுக்கு மட்டுமே என எழுதிவைக்கப்பட்ட விஷயம் அல்ல. பெண்களுக்கும் அதை அனுபவிக்க முழு உரிமை உண்டு.

ஆனால், பெரும்பாலான பெண்கள் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதே இல்லை என்பதுதான் நடைமுறையில் இருக்கும் தாம்பத்ய சிக்கல். `

மேல் ஆர்கஸம்’ (Male orgasm) பற்றி விவாதிப்பதைப் போல ‘ஃபீமேல் ஆர்கஸம்’ (Female orgasm) குறித்து விவாதிப்பது மிக மிகக் குறைவே.

உடலுறவின் போது தன் இணை தன்னைப் போல உச்சக் கட்டத்தை அடைந்தாரா இல்லையா என் பதைக் கேட்பது கூட இல்லை பல ஆண்கள்.

உண் மையில் சில ஆண்களுக்குப் பெண்களின் உச்சக்கட்டம் பற்றிய அடிப்படையே தெரிவதில்லை. சில ஆண்களோ அப்படிக் கேட்ட பிறகு மனைவியிடம் இருந்து இல்லை என்ற வார்த்தை வந்துவிட்டால் பெரும் மனச்சோர்வு அடைந்துவிடுவார்கள்.

இதன் காரணமாக அக்கேள்வியைத் தவிர்க்கும் சில ஆண்கள், அக்கேள்வி கேட்கப்படாததால் தன் இணை அடையும் மனச்சோர்வை பற்றி கொஞ்சமும் புரிந்துகொள்வதில்லை.

இத்தருணத்தில்தான் ஆண்கள் சுயநல வாதிகளாகிறார்கள்

;ஹிந்தியில் மிகவும் பிரபலமான ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ சீசன் 1 தொடரில் பிரபல நடிகை கியாரா அத்வானி நடித்த பகுதி, பெண்கள் உச்சக்கட்டம் அடையாததையும் அதனால் அனுபவிக்கும் சிரமங்களையும் விரசமின்றி காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

கியாரா அத்வானி, உண்மையில் பல பெண்களின் மனநிலையை அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார்.

பெண் ரகசியம்

உச்சக்கட்டம் என்பது ஆண்களை விட பெண்களுக்குக் கொஞ்சம் கூடுதல் நேரம் கழித்து ஏற்படலாம். மேலும், இப்படித்தான் ஏற்படும் என்று அறுதியிட்டு கூற முடியாது.

அதை அறிந்து உடலுறவில் சில சூட்சுமங்களை மேற்கொண்டால், ஆணோடு சேர்ந்து பெண்ணும் உச்சக் கட்டத்தை அடைய வழிவகை செய்ய முடியும்

பெண்ணுக்கான உச்சக்கட்டம் என்பது தனி நபர் சார்ந்தது. யோனிக்கு உள் புறத்தில் இருக்கும் ஜி-ஸ்பாட்டை மையப்படுத்தி பெண்ணுக்கான உச்சக்கட்டம் வெளிப்படலாம்.

கிளிட்டோரிஸ் எனும் உறுப்பை தொடர்புப்படுத்தி உச்சக்கட்டம் ஏற்படலாம். சில உறுப்புகளைச் சீண்டுவதன் மூலம் உச்சக்கட்டம் உண்டாகலாம்.

பெண் ணுக்கான தனித்துவமான ரகசியத்தை அறிந்து கணவன் செயல்படத் தொடங்கினால் ஒவ்வொரு முறை உடலுறவிலும் இருவரும் உச்சம்தொட்ட பிறகு இளைப்பாறலாம்.

ஆனால், பல உடலுறவுகளில் சில நிமிடங்களில் இளைப்பாறிவிடுகிறார்கள் ஆண்கள். பல பெண்களுக்கு அப்போது தான் காம இச்சையே தொடங்கி இருக்கும்.

அதன் பிறகு ஏக்கத்தோடு விலகிச் செல்வது மனரீதியான பிரச்னைகளுக்குப் பாதை அமைத்துக் கொடுக்கும்.

தனக்கு ஏற்படும் காம இச்சையை வெளிப்படுத்தும் வடிகாலாகப் பெண்களைப் பார்க்காமல் அவர்களுக்கு இருக்கும் உணர்வுகளையும் புரிந்துகொண்டு செயல்பட்டால் மட்டுமே இருவருக்கும் கலவி மொழி இனிமையை வழங்கும்.

அப்போதுதான் நீண்ட காலத்துக்கு உடலுறவில் பெண்களுக்கு இச்சை நீடிக்கும். ஒவ்வொரு முறை உடலுறவின் போதும் உச்சக்கட்டம் கொள்ளாமலே பெண்கள் ஏமாறும்போது, பாலின்பத்தின் உச்சத்தை அடையாமல், கலவியில் பெண்களுக்கு விருப்பம் இல்லாமலும் போகலாம்.

காதலோடு கூடிய காமம் தேவை

ஆண்கள் உச்சக்கட்டம் அடைந்த மறு நொடியே பெண்ணைவிட்டு விலகி நகர்வதன் பெயர் வெறும் காமம்.

ஆனால், படுக்கையறைகளில் தேவைப்படுவது காதலோடு சேர்ந்த காமம்தான். நீண்ட வருடங்கள் இல்லற வாழ்க்கை சிறக்க காதல் மொழுகிய காமம்தான் முக்கியம்.

உச்சக்கட்டத்தை அடைந்ததும் சோர்வுறும் ஆண்கள், தன் இணை உச்சக்கட்டத்தை அடைய வில்லை என்று தெரிந்தால் சிறிது நேரம் கழித்து மீண்டும் உடலுறவில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும்.

;ஆண்கள் உச்சக்கட்டம் அடைந்தும் சில நிமிடங்களுக்கு விறைப்புத் தன்மை நிலைத்திருக்கும். அதைப் பயன்படுத்தி உடலுறவைத் தொடர்ந்து மேற்கொண்டால் பெண்களின் உச்சக்கட்டத்துக்கு உதவியாக இருக்கும்.

மேலும், தன் துணைவிக்கு உடலுறவின்போது எப்படியான உடல் மொழிகள் தேவை எனப் பொறுமையாகப் பேசி ரகசியம் அறிந்து செயல்படுத்தினால் காமத்தில் சிகரம் தொட முடியும்.

;உடலுறவில் நீடித்து நிலைத்திருக்க நல்ல உடற்பயிற்சியும் முக்கியம். சிறிது நேர உடலுறவுக்கே ஏதோ இமயமலை உச்சியை அடைந்தது போன்ற மூச்சிரைப்பை வெளிப்படுத்தினால் யாரையும் திருப்திப்படுத்த முடியாது.

உடல்பருமன் இல்லாமல் உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிப்பது நோய்கள் வராமல் தடுப்பதற்கான சூட்சுமம் மட்டுமல்ல, உடலுறவில் ஆதிக்கம் செலுத்தி இருவரும் இனிமை காண்பதற்கான வழியும்கூட!

ஒரு பெண், தான் உச்சக்கட்டம் அடையாததை வெளியில் சொன்னால் தவறாக நினைத்துவிடுவார்களோ எனக் கூச்சப்பட்டுக்கொண்டு யாரிடமும் சொல்லாமல் மனச்சோர்வுக்கு உள்ளாவது அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது.

எவ்வித கூச்சமும் இல்லாமல் குடும்ப மருத்துவரிடம் உடலுறவு குறித்து கணவனும் மனைவியும் ஆலோசனை மேற்கொள்ளலாம்.

மேலும் இப்போது நிறைய உளவியல் நிபுணர்களும் வழிகாட்டுவதற்காகக் காத்திருக்கின்றனர். எளிதாகத் தீர்வு காணக்கூடிய இந்தச் சிக்கலை ஆலோசனை பெறாமல், காமத்தின் உச்சத்தைத் தவறவிடுவது பிழையன்றோ!

;சரி… அப்படி உச்சக்கட்டத்தில் என்ன தான் ஏற்படும்? அது போதை தரும் ஓர் உணர்வு. இதயத்துடிப்பு அதிகமாகும். இன உறுப்புகளில் லேசான தசைத்துடிப்பு உண்டாகலாம்.

சிலருக்கு வியர்க்கலாம். இன உறுப்பு பகுதி மற்றும் தேகம் முழுவதும் வித்தியாசமான ஓர் உணர்வு கிடைக்கும்.

உச்சக்கட்டத்துக்குப் பிறகு உடலில் சுரக்கும் எண்டார்ஃபின்கள் இனம் புரியாத மகிழ்ச்சியை உண்டாக்கும்.

இந்த உச்சபட்ச மகிழ்ச்சி ஆண்களுக்கு மட்டும் சொந்தமா என்ன? அதே வேளையில் பெண்கள் உச்சக்கட்டம் அடையாமல் போவதற்குச் சில மருத்துவ காரணங்களும் இருக்கின்றன.

மருத்துவரின் ஆலோசனை போதும் அவற்றைச் சரி செய்ய!

உச்சக்கட்டம் இருவருக்கும் சொந்தம்… அதை ஒவ்வொரு முறையும் இருவரும் அடைவது தம்பதியர் கலவி மொழியைக் கற்றுத் தேறும் காலத்தைப் பொறுத்தது!

Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)
Share.
Leave A Reply

Exit mobile version