அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை சுட்டுக் கொல்ல முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரியான் ரூத் என்பவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் Florida golf மைதானத்தில் ட்ரம்ப், ஜனாதிபதி வேட்பாளராக இருந்தபோது அவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
செப்டம்பர் 15ஆம் திகதி அன்று ட்ரம்ப் தனது West Palm Beach golf மைதானத்தில் golf விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றது.
அமெரிக்க இரகசிய சேவை முகவர் ஒருவர், தன்னை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால், சந்தேகத்திற்குரிய அந்த நபர் புதரை விட்டு ஓடி, கருப்பு நிற சிற்றூந்தில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டதாக அதனை நேரில் பார்த்த சாட்சி குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் சிற்றூந்தை தடுத்து நிறுத்தி ரூத் கைது செய்யப்பட்டதாக முன்னர் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது குறித்த நபர், குற்றவாளி என அமெரிக்கா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அது மாத்திரமன்றி, தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் ரூத் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ள முயன்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.