யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிவான் சுபறாஜினி ஜெகநாதன் இன்றையதினம் (24) பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நீதவான் சுபராஜினியின் கணவன் ஜெகநாதன் ஒரு சிரேஸ்ட சட்டத்தரணியாவார்.

சுபராஜினி சட்டத்துறை கற்கை நெறியைப் பூர்த்தி செய்த பின்னர் சட்டத்தரணியாக ஜெகநாதனிடமே பயிற்சி பெற்று வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் முடித்து கொண்டனர்.

இந் நிலையில் நீதவானாக பரீட்சையில் சித்தி பெற்ற பின்னர் சுபறாஜினியை அவரது கணவன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து தானே நீதவான் போல் பிணக்குகளுக்கு தீர்ப்புகள் வழங்க ஆலோசனை கொடுத்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

சுபராஜினி நீதவானின் உத்தியோகபூர்வ விடுதியில் தங்கியிருந்து கொண்டு சட்டத்தரணியான கணவன் ஜெகநாதன் பல வழக்குகளுக்கு சட்டத்தரணிகளிடம் பேரம் பேசி பணம் பெற்று தீர்ப்பு வழங்க சுபராஜினிக்கு ஆலோசனை கொடுத்து தீர்ப்புகளை மாற்ற வைத்ததாகவும் தெரியவருகின்றது.

அத்துடன் நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்து கொண்டு வெளிமாவட்டங்களில் உள்ள பிணக்குகளையும் மல்லாகம் நீதவான் அதிகார எல்லைக்குள் இருந்து பொலிசார் மூலம் தலையிட்டு வந்ததாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட நிலையில் நீதவான் சுபறாஜினியின் பதவியை நீதிச் சேவை உயர்பீடம் பறித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version