கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று காட்டு யானை மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை – பக்கமுன பிரதான வீதியில் ரிதிஎல்ல வனப்பகுதியில் இன்று  (26) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டு யானை ஒன்று வீதியின் நடுவில் இருந்துள்ள நிலையில், சாரதியழனட கட்டுப்பாட்டை இழந்த லொறி யானை மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் லொறியின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த விபத்தின் போது லொறியில் இருந்த கோழிகள் பல உயிரிழந்துள்ள நிலையில் வீதியில் சிதறுண்டு இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

விபத்து தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version