ஐநா பொதுச்சபையில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸ் அமைப்பினரை எச்சரித்தார்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80வது ஐநா பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. இதில் நெதன்யாகு தனது பேச்சை தொடங்கியதும் சிலர் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் சிலர் கைதட்டி அவரை வரவேற்றனர்.

கடந்தாண்டு ‘சாபம்’ என்ற தலைப்பில் வரைபடத்தை காட்டி பேசியதாக கூறிய நெதன்யாகு, மீண்டும் அதையே கொண்டு வந்துள்ளதாக பேசினார்.

இது ”இரானின் பயங்கரவாத கோடு” என்ற சாபத்தை காட்டுவதாக கூறினார்.

“இந்த கோடு உலகின் அமைதியையும், எங்கள் பிராந்தியத்தின் நிலைத்தன்மையையும், என் நாடான இஸ்ரேலின் இருப்பையும் அச்சுறுத்தியது” என்றார்.

மேலும் 2023 அக்டோபர் 7ஆம் தேதி நடந்த தாக்குதலை இந்த உலகம் மறந்துவிட்டது எனப் பேசிய நெதன்யாகு, “ஆனால் நாங்கள் நினைவில் வைத்துள்ளோம்” என்றார்.

பின் தான் அணிந்திருந்த ஜாக்கெட்டில் இருந்து பேட்ஜை சுட்டிக்காட்டி, “நாங்கள் சண்டை போடுவதற்கும், நாங்கள் ஏன் வெற்றி பெற வேண்டும் என்பதற்கான காரணம் இதில் உள்ளது” என்றார்.

207 பணையக்கைதிகளை இஸ்ரேல் மீட்டுள்ளது என்றார். மேலும் மீதமுள்ள 48 பேரில் 20 பேர் காஸாவில் உயிருடன் உள்ளதாக குறிப்பிட்டு அவர்களின் பெயரையும் வாசித்தார்.

“நாங்கள் உங்களை மறக்கவில்லை. உங்களை வீட்டிற்கு அழைத்துவரும் வரை இஸ்ரேல் ஓயாது” எனக் கூறினார்.

“உங்களை கைகளை கீழே போட்டுவிடுங்கள். என் மக்களை விடுவித்து விடுங்கள். பணையக்கைதிகளை விடுதலை செய்யுங்கள்” என ஹமாஸ் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

“இதை செய்தால் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள். இல்லையென்றால் இஸ்ரேல் உங்களை சும்மா விடாது” என்றார்

Share.
Leave A Reply

Exit mobile version