புதிய மாணவர் ஒருவரை பகிடிவதையின் பேரில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் குளியாப்பிட்டியவில் அமைந்துள்ள வடமேல் (வயம்ப) பல்கலைக்கழக மாணவர்கள் நான்குபேருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு மாணவர்களும் நேற்று (26) குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட  பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவன் தரப்பில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் குறித்த மாணவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இருந்தனர்.

இதன்போது ​, குறித்த நான்கு மாணவர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version