திருகோணமலை, உப்புவெளி பகுதியில் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த இந்தியப் பெண்ணின்1,616,500 ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் அமெரிக்க டொலர்கள் காணாமல் போயுள்ளது.

இந்தியப் பெண் தனது கணவருடன் விடுமுறைக்காக இலங்கைக்கு வந்து உப்புவெளியிலுள்ள சுற்றுலா விடுதியில் 24 ஆம் திகதி தங்கியிருந்தார்.

மறுநாள், கடற்கரைக்கு சென்று சில மணி நேரம் கழித்து தனது அறைக்குத் திரும்பினார்.

அறையில் வைத்திருந்த கைப்பையில் இருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் அமெரிக்க டொலர்கள் காணாமல் போனதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கைப்பையில் இருந்து இரண்டு மோதிரங்கள், பென்டனுடன் கூடிய இரண்டு சங்கிலிகள் மற்றும் இரண்டு வெள்ளி மோதிரங்கள், 180 அமெரிக்க டொலர்கள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உப்புவேலி பொலிஸார் மற்றும் நிலாவேலி சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version