கரூர் சுற்றுவட்டார மருத்துவர்கள் உடனடியாக கரூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வருகின்றனர். கரூர் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு.

திருச்சி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களை உடனடியாக கரூர் செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 31 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு. – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

கரூர் அரசு மருத்துவமனைக்கு 29 பேரின் உடல்கள் இறந்த நிலையிலேயே கொண்டு வரப்பட்டுள்ளன. இவர்கள் பிரசாரக் கூட்டத்திலேயே உயிரிழந்தனர்.

மருத்துவமனையில் உள்ளவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. 45க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் இருந்து இன்னும் சடலங்கள் வரலாம் என்றும் அச்சத்தில் உள்ளோம்”

– மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

Share.
Leave A Reply

Exit mobile version