யாழில் பிறந்து நான்கு மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று(26) உயிரிழந்துள்ளது.

உடுவில் கிழக்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மேலும் தெரியவருகையில்,

குறித்த குழந்தைக்கு கடந்த 24ஆம் திகதி நான்கு மாதங்களில் ஏற்றப்படும் தடுப்பூசி ஏற்றப்பட்ட பின்னர் குழந்தையின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில்  குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அரைமணி நேரத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது.

மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version