காத்தான்குடியில் இருந்து பொத்துவில் நோக்கி பிரயாணம் செய்த சொகுசு கார் யானையுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் சனிக்கிழமை(27) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் ஊரணி காட்டுப்பகுதியில் யானையுடன் மோதுண்டு குறித்த கார் பலத்த சேதம் அடைந்ததுடன் அதில் பயணித்த குடும்பம் தெய்வாதீனமாக காயங்கள் எதுவுமின்றி தப்பியுள்ளனர்.
மேலும் குறித்த பகுதிகளில் பிரதான வீதியில் இரவு மற்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.