பொலிஸ் விசேட அதிரடிப்படை, ஜெயவர்தனபுர முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, கொட்டாவ பொலிஸ் பிரிவின் ருக்மலே வீதி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மதியம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, அவரிடமிருந்து, 75 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின், பல்வேறு வகையான 458 வெடிமருந்துகள், ஒரு ரி-56 வெடிமருந்து தோட்டா, 30 போலி வாகன இலக்க தகடுகள், 15 வருமான வாகன உரிமங்கள், 15 காப்பீட்டு சான்றிதழ்கள் மற்றும் இரண்டு தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மேல் மாகாண தெற்கு குற்ற தடுப்புப்பிரிவில் ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவை – அங்குலான பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
மேல் மாகாண தெற்கு குற்ற தடுப்புப்பிரிவினரால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.