பளை சோரன்பற்று பகுதியின் பிரதான வீதியில் அதிகளவான மணல் வீதியில் கொட்டப்பட்ட நிலையில் சிதறுண்டு காணப்படுவதனால் விதியூடாக பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிகொண்டுள்ளனர்.

மணல் கடத்தல்காரர்கள் பொலீசாரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கு மணல் மண்ணை குறித்த வீதியில் கொட்டி விட்டு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நாளாந்தம் வடமராட்சி கிழக்கில் இருந்து தமது கிராமம் ஊடாகவும், தமது கிராமத்தில் இருந்து ஏனைய இடங்களுக்கும் அதிகளவான மணல் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

எனவே இதனை கட்டுப்படுத்த பொலிசார் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சோறன்பற்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

 

 

Share.
Leave A Reply

Exit mobile version