“காசாவில் புதிய போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் போது கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அலுவலகத்தை தாக்கியது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு நேதன்யாகு மன்னிப்பு கேட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் இருந்தபடி கத்தார் பிரதமர் ஜாசிம் அல் தானியை தொலைபேசியில் அழைத்து நேதன்யாகு மன்னிப்பு கேட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும் வருங்காலங்களில் கத்தார் மீது இதுபோன்ற தாக்குதல்களை நடத்த மாட்டோம் என அவர் உறுதியளித்ததாக கூறியுள்ளது.
இந்த போன் காலில் டிரம்ப்பும் உடன் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த மாதம் 9 ஆம் தேதி, தோஹாவில் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்காக வந்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் கத்தார் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். “,