நாட்டில் நாளை (01) முதல் பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
அதேநேரம் பயணச் சீட்டு வழங்காத நடத்துனர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அதன் செயல்பாட்டு முகாமையாளர் ஜீவிந்த கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.
எனவே நாளை முதல் பயணச் சீட்டு வழங்கப்படுதலும் பயணத்தின்போது பயணிகள் அதனை தன்வசம் வைத்திருப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.