யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கரவெட்டி மத்தி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த ஆசிரியர் குருநகர் பகுதியில் வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில் அவரது உறவினர் ஒருவர் இரவு அங்கு சென்றவேளை குறித்த ஆசிரியர் உயிரிழந்து காணப்பட்டுள்ளதாக தெரியவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.